Monday, 23 July 2018

நடராஜன்

நடு விழியில் நின்
நடனம் செய்ய
துணையாகி ஆடும்  இமைகள்
துயில மறுக்க
உயிரற்ற உறக்கமே உதவிட முடியும் !!

Saturday, 24 September 2016

கலைந்திடவே கனவோ ?

பிழம்பாய் அழுதிட்ட கண்கள்
மணலாய் உலர்ந்திட்ட நாக்கு
விரலாய் வடிந்த நம்பிக்கை
பாசியென வழுக்கிட்ட வாழ்க்கையில் 
வேசியென வாடிய மனம் !

Wednesday, 19 March 2014

உயிர்

கருவாயில் விட்டொழித்து
மறுவாயில் தொட்டொழுகி
விடுதலை காணா விளையாட்டு !!!!!!!

Thursday, 2 January 2014

நங்கை நீராடும் நேரம்

நவமணி நசுக்கி.,
நதிகள் நனைத்திடு !
கதிரொளி கயிறென,
கருமேகம் கட்டிடு !!!

Saturday, 23 November 2013

பயணம்

இரவில் முற்றிடும்,
உறவை முற்றிடும்,
துறவை தேடி..

நிலவுடன்,
நினைவுடன்,
நடுநிசி நடைபயணம் !!

Wednesday, 21 August 2013

மன மொழி

கன்னி அவ பேசல
நானும் பேச காசில்ல
தனிமை வெள்ளம் மனசுல
கறை காணுது பழசுல !!

Saturday, 17 August 2013

இயல்பின்மை



நீந்தி செல்லும் மீனடா
நீச்சலோ வீனடா !!!
ஓடித் திரியும் நாயடா
ஓய்வதே மேலடா !!!